மதுரை நகரத்துக்கு மேற்குப்பகுதியில் வாழ்கின்ற பிரமலைக்கள்ளர்கள், மேல்நாட்டு கள்ளர்கள் என்றும், ஆனையூர் கள்ளர்கள் என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஆனையூர் கிராமம், பாண்டியர் ஆட்சிகாலம் முதல் இப்பகுதிக்கான வருவாய் தலைமையகமாக (Revenue Head Quarters) இருந்தது. அதனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தகள்ளர்கள் ஆனையூர் கள்ளர்கள் எனப்பட்டனர்.
திருப்பரங்குன்ற மலை கிழக்கு எல்லையாகவும், ரத்தினகிரிமலை (கணவாய்மலை) மேற்கு எல்லையாகவும், குண்டாறு தெற்கு எல்லையாகவும் நாகமலை வடக்கு எல்லையாகவும் கொண்டு அமைந்துள்ள பகுதியே புறமலை அல்லது பிரமலை நாடு என முத்துத்தேவர் குறிப்பிடுகிறார். நாகமலைக்கு வடக்கேயும் சில பூர்வீகக் கள்ளர் கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட கள்ளர்களே பிறமலைக்கள்ளர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இப்பகுதியைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மதுரை நகரத்திலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவிவாழ்கின்றனர்.
கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கள்ளர்கள் இப்பகுதியில் வந்து குடியமர்ந்தனர் எனவரலாற்றாசிரியர் ஆர். கே. கண்ணன் குறிப்பிடுகின்றனர். 11 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டிய தேசம் சோழர்கள் ஆட்சிக்குப் உட்பட்டிருந்த போது பாண்டிய தேசத்தில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதன் பொருட்டு தஞ்சையில் இருந்து தமது சமுக கள்ளர்களை கொண்டு வந்தனர். இவர்களை நாகமலை, ஆழகர் மலையில் கோட்டை கட்டிக்குடியமர்த்தினர் என்பர். ஆனால் இந்த பகுதியின் பூர்வ தொல் பழங்குடி மக்களுக்கான பாரம்பரிய கலாச்சார அடையாளங்களுடன் பிறமலை கள்ளர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். M130y என்ற மரபணு அறிக்கை இம்மக்களை தொல்குடிகள் என்று ஆய்வு பூர்வமாக நிறுபிக்கிறது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே திடியன் பகுதி குறிப்பிட்டப்படுகிறது. திடியன் கூட்டத்தினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு ஆஸ்திரேலியாவில் உள்ள வரலாற்று ஆய்வாளர் தெற்காசியாவின் அரசகட்டமைப்பை ஆய்வு செய்யும் போது கள்ளர் நாடுகளை தவிர்க்க முடியாமல் எழுதுகிறார். காரணம் அந்த மக்களின் தனித்துவமான பண்பாடு ஒரு மையப்புள்ளியாக இருக்கிறது.
பிரமலை நாட்டின் கல்வி அபிவிருத்தியானது; அரசு சமூக அபிவிருத்தித் துறையில் நிறைவேற்றியுள்ள மிகப் பெரிய சாதனையாகும் என்று சொன்னால் மிகையாகாது. மக்களாட்சியின் மாண்பை இங்கு காணலாம். மத்திய அரசு வகுத்துக் கொடுத்த ஐந்தாண்டுத் திட்டம், பொருளா தாரம் சீரான நிலையில் நாட்டு மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வழிகள் வகுத்துள்ளன என்றாலும் மாகாண அரசு நிறைவேற்றும் பணிகளைப் பொறுத்து இருக்கிறது.
மக்கள் ஆட்சிப் பலனடையும் அளவு 1962க்கு மேல் கள்ளர் சமூக அபிவிருத்திப் பணிகளுக்கு ஒதுக்கியுள்ள அளவு தெளிவாகத் தெரிகிறது. அதற்கேற்பப் பணிகளும் வெகு வாக வளர்ச்சியாகக் காண்கிறோம். சுதந்திரம் அடைந்த காலத்திற்குப் பிறகு பிரமலைத்தேவமார்களின் அபிவிருத்திப் பணிகளில் கூட்டுறவுத் துறையும் கல்வித் துறையுமே வெகு வாகக் கவனம் செலுத்தலாகியது. அதிலும் 1960க்கு மேல் கூட்டுறவு மேற்பார்வை மத்திய பாங்கிற்கு விடப்பட்ட பிறகு வெகுவாகக் கவனித்து வருவதானது கல்வித்துறையே யாகும்.இன்றைக்கு ஒரு சென்செஸ் எடுத்துப் பார்ப் போமானால் பிரமலை நாட்டில் தேவமார்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 10 சதத்திற்கும் குறைவாகவே இருக்குமென்பதற்கு ஐயமில்லை.
1920ல் இருந்து கட்டாய ஆரம்ப இலவசக் கல்வி அமுலில் இருந்து வந்தது. 1947க்கு மேல் கைரேகைச் சட் டம் ரத்தான பிறகும் கல்விச் சலுகை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆரம்பக் கல்வி மாத்திரமல்ல; உயர்தரக் கல்வி பட்டப் படிப்பு தொழில் கல்வி, சட்டப் படிப்பு இன்னும் ஆதாரமான எல்லாக் கல்விச் சலுகைகளும் அரசு வழங்கி வருகிறது. ஆகவே 55 ஆண்டுகள் அரசு செலுத்திய விசேஷ கவனத்தின் பலன் கண்கூடாக விளங்குகிறது.
தேவர் குலமக்கள் சிந்தனைக்கும் செயலுக்கும்: நமது சமூக மக்கள் தங்களை முன்னாள் அரசாண்ட பரம் பரையினர் என்று வரலாறு கூறுவதை கண்டு பெருமைப்படு 475 கிறார்கள். அவர்கள் கீர்த்தியோடு என்றும் அழியாப்புகழ் சம்பாதித்திருப்பதைமாத்திரம் கண்டு என்னபலன் நமக்குக் கிடைக்கப்போகிறது. முன்னாள் முடிமன்னர்கள் தங்கள் சிந்தனாசக்தியையும் (மூளையையும்) மனவலிமையையும் உப யோகித்து, தெய்வச் சாஷியாக அரசாண்ட காலத்தில் அழி யாப்புகழ் அடைந்தனர் என்பதை வரலாறு விளக்குகிறது. ஆனால் பிற்காலங்களில் நுண்ணறிவும் மனவலிமையும் குறைந்து, தோள் வலிமையை முற்றிலுமாக நம்பி போட்டி பொறாமை இனத்துரோகம் ஆகிய அழிவுப் பாதைக்கு இடந் தந்து ஒற்றுமைக் குறைவாலும் பொறுமையின்மையினாலும் எத்திப் பிழைக்க முற்பட்டதாலுமல்லவா? நாட்டையும் இழந்து, தாங்களும் நலிந்து போனார்கள் என்பதை வர லாறு விளக்குகிறதே! அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்படியானால் நமது வாழ்நாளில் திசைதிருப்ப வேண் டிய கொள்கைகள் நமக்குப் புலப்படுகிறதல்லவா? முன் னொர்கள் கண்ட நல்ல பலன்களை நாம் கடைப்பிடித்து அவர் கள் கையாண்ட வேண்டாக்கொள்கைகளை விலக்கி சிறந்த வாழ்நாளை நாம் அமைத்துக் கொள்வதே வரலாற்றை அறிந்ததால் கிடைக்கும் பலன் அல்லவா? தற்காலம் நாம் வாழ்ந்து காட்டும் வழி முறைகள் நம்முடைய பிற்காலச் சந்ததியார்களுக்கு வழிகாட்டியாய் அமைவதற்கு நாம் வரலாறு படைக்கவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம் என் பதைக் கவனத்தில் வைக்கவேண்டும்.
தேவர் இனமக்கள் ஒன்றுபட்டு அமையவும் தமக்குத் தாமே அபிவிருத்திக்கு உதவவும் முன் வரவேண்டும். தற் பெருமை பேசுவது கூடாது. பிறர் வாழ்வதைக் கண்டு இடர் செய்வது கூடாது. அன்னியர் விவகாரத்தில் தலை யிடலாகாது. தன்னின மக்களைக் காட்டிலும் பிற சமூக மக் களிடம் நாம் சம்பாதிக்கும் அபிமானமே நமக்கு மேலான சொத்து என்பதையும் வரலாற்றில் அறிந்து வருகிறோம். ஆகவே வாழ்வில் நலம்பெற ஒன்றுபட்டு வாழவேண்டும்.