"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
அம்பலகாரர் / அம்பலம் வரலாறு"அம்பலகாரர்" என்பது கள்ளர் சாதிப் பட்ட பெயர்களுள் ஒன்றாகும். அம்பலகாரன் என்ற சொல்லுக்கு "கள்ளர் சாதித் தலைவன்" என்றும் "கள்ளர் நாட்டுத் தலைவன்" என்றும் பொருள் தருகிறது தமிழகராதி.
அம்பலம் என்பது பிரச்சனைகளை அம்பலப்படுத்தி அதாவது வெளிப்படுத்தி விவாதித்து தீர்வு காண்கின்ற பொது சபை. அதனை தலைமை தாங்கி வழிநடத்துபவன் அம்பலக்காரன். அவ் அம்பலக்காரன் நீதி அதிகாரமுடையவனாகவும், காவல் அதிகாரம் உடையவனாகவும் இருப்பான்.
கிராமங்களில் ஊர்த்தலைவர்களாக அம்பலகாரர்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் "அம்பலம்" என்ற வார்தையைப் பட்டமாகப் பயன்படுத்திக் கொள்கிறனர்.
வாண்டையார் வரலாறுகள்ளர் மரபில் நீண்ட வரலாறு உடையவர்கள் வாண்டையார் பட்டம் உடையவர்கள். சிலர் வாண்டையார் சாதி என்று தனி சாதியாக நினைக்கின்றனர். இது கள்ளர்களுக்கு மட்டுமே உரிய பட்டமாம்.
வாண்டையார், தெத்து வாண்டையார், பருதி வாண்டையார், நெடுவாண்டையார் வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன் என்று பட்டங்களை உடைய கள்ளர் மரபினர், இன்றும் சோழமண்டலத்தில் சிறப்போடு வாழ்கின்றனர்.
வாண்டையார் பட்டமுடைய கள்ளர் மரபினர் மேலே குறிப்பிட்ட பகுதிகளை தவிர கீரனூர், மேலக்கரும்பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி (புதுக்கோட்டை) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை, கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம், கோனூர், திருபுவனம், வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.