அகில இந்திய முக்குலத்தோர் கூட்டமைப்பு

அகில இந்திய முக்குலத்தோர் கூட்டமைப்பு வரலாறு

13.09.2011 அன்று சென்னை தேவர் சங்கம், அணைத்து தேவர் இயக்கங்களையும், சமுதாய பெரியோர்களையும் அழைத்து ஒரு கருத்தாய்வு நடத்தியது. இக்கூட்டத்தின் முடிவில், கலந்து கொண்ட பெரும்பாண்மையோரின் விருப்பத்திற்கு இணங்க, அனைத்து தேவர் இயக்கங்களையும் ஒன்றிணைத்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. சென்னை கூட்டத்தினை தொடர்ந்து அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் தேவர் இயக்கங்களையும் அழைத்து சென்னை தேவர் நண்பர்கள் சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தேவர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அரசியல் சார்பின்றி, உலகளாவிய நிலையில் ஆங்காங்கு இயங்கிவரும் தேவர் சமுதாய அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற முடிவிற்குஏற்ப தேவர் சங்கங்கள் கூட்டமைப்பு உருபெற்று தொடங்கப்பட்டது, தொடங்கியவுடன் சங்கங்கள் உறுப்பினராக பதிவு செய்து தொடங்கிய கூட்டமைப்பு இன்றளவில் 15 சங்கங்களை உள்ளடக்கிய முக்கிய இயக்கமாக தேவர் சமுதயாத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டுவருகிறது.

தோற்றம் மற்றும் வளர்ச்சி

தேவர் என்றால் மன்னர்கள் பயன்படுத்தும் பட்டம். தமிழகத்தில் இந்தப் பட்டம் முக்குலத்தோர் சாதியைக் குறிக்கிறது.

தேவர் என்பது முக்குலத்தோரின் முதன்மையான பட்டங்களில் ஒன்று. முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையார் என்பதே சாதி. தேவர் என்பது "தெய்வீக இயல்புடையவர்கள்" என்றும், முக்குலத்தோர் என்றால் "மூன்று குலங்கள் ஒன்றிணைந்தன" என்றும் பொருள் ஆகும்.

தே < தேன் = இனிமை
தே < தேன் - உயரத்தில் இருக்கும் பொருள்

இந்த வகையில் 'தே' என்னும் வேர்ச்சொல் இனிமையையும், உயர்வையும் குறிக்கும். தே+அர்=தேவர், எனவே தேவர் என்னும் சொல் 'உயர்ந்தவர்', 'இனியவர்' என்னும் பொருள்களின் அடிப்படையில் தோன்றியது.

அகில இந்திய முக்குலத்தோர் கூட்டமைப்பு

அகமுடையார்

அகமுடையார் என்றால் அகத்திற்கு தேவையான அறிவும் - வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள். மேலும் அகம்படியர் என்பதற்கு எதிரிகளை படிய வைக்கும் திறனை அகத்தில் கொண்டவர் என்றும் பொருளும் உண்டு. பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் படிக்க

கள்ளர்

"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர்.

மேலும் படிக்க

மறவர்

சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் 'தேவர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக 'சேதுசமுத்திரம்' எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார்.

மேலும் படிக்க

பிரமலைக் கள்ளர்

மதுரை நகரத்துக்கு மேற்குப்பகுதியில் வாழ்கின்ற பிரமலைக்கள்ளர்கள், மேல்நாட்டு கள்ளர்கள் என்றும், ஆனையூர் கள்ளர்கள் என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆனையூர் கிராமம், பாண்டியர் ஆட்சிகாலம் முதல் இப்பகுதிக்கான வருவாய் தலைமையகமாக (Revenue Head Quarters) இருந்தது.

மேலும் படிக்க

கமிட்டி உறுப்பினர்கள்

K. அண்ணாதுரை BA.BS

அகில இந்திய தலைவர்

Founder

G. ரவீந்திரன் MA.BL

அகில இந்திய செயலாளர்

All India General Secretary

R. மதி அழகன்

மகாராஷ்டிரா மாநிலம்
மும்பை

பாலசுப்ரமணியம் B.A

ஆந்திரப் பிரதேசம்

சக்திவேல் B.S.C

கர்நாடக மாநிலம்
பெங்களூர்

R.குருசங்கர். B.COM

கேரள மாநிலம்

படங்கள்